இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்














இத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில்
எழுந்தருளியுள்ளது இந்தஆலயம்,
UNIONE INDUISTA ITALIANA - SANATANA DHARMA SAMGHA -GITANANDA ASHRAM
எனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 20 வருடங்களாக வழிபாடுகள் நடந்து வருகின்றது.
இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தான் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.
பிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளது.
கூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.
ஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.
சமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்படுகின்றது.
தீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது. அத்துடன் மதிய போசனமும் உண்டு.
இங்கு வேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக உள்ளது.
தினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு... சதுர்த்தி, சிவராத்திரி, நவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.
திருமணம், வித்யாரம்பம் (குழந்தைகள் முதலில் கல்வி கற்கும் நிகழச்சி) முடிஎடுத்தல்
, 



நாட்டிய பள்ளி ஆகியவை உள்ளன.
TALAVIDYA
International Academy
of Kuchipudi
and Bharata Natyam
Località Pellegrino 1
17041 ALTARE (SV) - ITALY
to ask for the programme of the courses please send an e-mail to
Atmananda
TALAVIDYA
International Academy
of Kuchipudi
and Bharata Natyam
Località Pellegrino 1
17041 ALTARE (SV) - ITALY
tel +39 - (0)19 - 584692 - fax +39 - (0)19 - 584838
யோகா வகுப்புகள் நடைபெறுகிறது.
உண்டியலைக் காணவில்லை. இந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம் மிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. யோகா, பரத வகுப்புகள் நடைபெறுகிறது.
சில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.
சேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு இல்லை. அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.
இக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து 019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால்,
வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.